5 ½ Month Scheme (With Bonus)
-
இது 5 ½ மாத நகை சேமிப்பு திட்டமாகும்.
-
வாடிக்கையாளர் ஐந்து மாதங்கள் தவணைத்தொகை செலுத்திய பிறகு தங்களுக்கு அரை மாதத் தவணைத்தொகை (15 நாட்கள்) போனஸாக வழங்கப்படும்.
-
செய்கூலி, ஹால்மார்க்கிங், GST மற்றும் இதர வரிகளை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.
-
சீட்டு தொகை முதிர்வு பெறும் தேதியில் தங்கத்தின் அன்றைய மார்க்கெட் விலைக்கு வாடிக்கையாளர் தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.
-
ஒவ்வொரு மாதமும் சீட்டு தொகையை 10-ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.
-
திட்டம் பதிவுசெய்து 165 நாட்களுக்கு பிறகே வாடிக்கையாளர் நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.
-
சீட்டு தொகையை ரொக்கமாக மட்டுமே வரவு வைக்கப்படும். தங்கத்தின் எடையாக வரவு வைக்க இயலாது.
-
சரியான தவணைத்தொகையை மாதமாதம் செலுத்தினால் மட்டுமே போனஸ் வழங்கப்படும்.
-
எக்காரணத்தைக்கொண்டும் சீட்டு தொகையை பணமாக திருப்பி தர இயலாது. நகையாக மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும்.
-
ஆன்லைன் மூலம் செலுத்திய தவணைத்தொகைக்கான ரசீது எண்னை எங்களுடைய கிளையில் தெரியப்படுத்தி சீட்டு அட்டையில் வரவு வைத்து கொள்ளவும்.
-
முதிர்வு தேதிக்கு முன்னால் வாடிக்கையாளர் இத்திட்டத்தை ரத்து செய்தால், போனஸ் வழங்கபட மாட்டாது.
-
தவணைத்தொகையை தாமதமாகவோ அல்லது இரண்டு தவணையை இணைத்து செலுத்தும் வசதி இல்லை. தவணைத்தொகையை மாதாமாதம் தொடர்ந்து செலுத்த தவறினால் தங்களது நகை சேமிப்புத்திட்டம் ரத்து செய்யப்படும்.
-
தாங்கள் எந்த கிளையில் நகை சேமிப்புத்திட்டத்தில் பதிவுசெய்து கொண்டீர்களோ அதே கிளையில் மட்டுமே திட்டம் முதிர்வு பெற்றபின் நகைகளை வாங்கிக்கொள்ள முடியும். மற்ற கிளைகளில் முதிர்வு செய்ய இயலாது.
-
தவணைத்தொகை சரிவர செலுத்தாமல் இடையில் நிறுத்திவிடும் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய தொகைக்கான தங்க நகைகளை வாங்கிக்கொள்ளளாம். போனஸ் வழங்கப்படமாட்டாது.
-
நகை சேமிப்புத் திட்டத்தின் மூலம் தாங்கள் எங்களது கிளையில், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள நகைகளை மட்டுமே வாங்க முடியும். ஆர்டர் செய்து நகைகளை வாங்க முடியாது.